×

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 111 இடங்களுக்கு நடந்த தேர்வு முடிவுகள் ரத்து

சென்னை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள 111 கணினி இயக்குபவர் இடங்களுக்கு நடந்த தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள 111 கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வெளியானது. இதையடுத்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு கடந்த 8ம் தேதி சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய 4 நகரங்களில் எழுத்து தேர்வு நடந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக எழுத்துத்தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நலவாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப முதற்கட்ட எழுத்துத்தேர்வு கடந்த 8ம் தேதி நடந்தது. தற்போது எழுத்துத்தேர்வு, தேர்வு முடிவுகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தேர்வு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.Tags : Construction Labor Board , Construction Labor Welfare Board, Examination Results
× RELATED நாடு முழுவதும் நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைப்பு..: ஐ.சி.ஏ.ஐ அறிவிப்பு