×

சேமிப்பு மையங்களில் ஈரப்பதமானிகள் வாங்க 60 லட்சம் ஒதுக்கீடு: தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: சேமிப்பு மையங்களில் ஈரப்பதமானிகள் வாங்க ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் 2019-20 பட்ஜெட் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் திறந்தவெளி சேமிப்பு மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் ஆகியவற்றில் சேமிக்கப்படும் உணவு தானியங்களின் ஈரப்பதத்தினை ஆய்வு செய்வதற்கு 200 எண்ணிக்கையிலான ஈரப்பதமானிகள் ரூ.60 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து சேமிப்பு மையங்களில் 200 ஈரப்பதமானிகள் வாங்க ரூ.60 லட்சம் ஒதுக்கி தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசாணை வெளியிட்டுள்ளது.



Tags : storage centers ,Government of Tamil Nadu , Storage Centers, Allocation, Government of Tamil Nadu, Govt
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...