×

திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம் கலெக்டர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம் கலெக்டர்கள் உள்பட, பல்வேறு துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு:
தமிழ்நாடு கனிமவளத்துறை நிர்வாக இயக்குநராக இருந்த மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இந்த பதவி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக்கிடம் கூடுதல் பொறுப்பாக இருந்தது. எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக இருந்த நசிமுதீன், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இந்த பொறுப்பு தீரஜ்குமாரிடம் கூடுதல் பொறுப்பாக இருந்தது.

தொழில் துறை ஆணையர் மற்றும் தொழில் வர்த்தகத்துறை இயக்குநராக இருந்த ராஜேந்திரகுமார், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையராக இருந்த ஜோதி நிர்மலா, பத்திரப்பதிவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கைவினைப் பொருட்கள் வளர்ச்சித்துறை தலைவராக இருந்த சந்திரமோகன், எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறுபான்மை நலத்துறை ஆணையராக இருந்த வள்ளலார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராகவும், வேலூர் உதவி கலெக்டர் மேக்ராஜ், நாமக்கல் கலெக்டராகவும், அந்தப் பதவியில் இருந்த ஆசியா மரியம், தமிழ்நாடு எரிசக்தித்துறை நிர்வாக இயக்குநராகவும், திருப்பூர் கலெக்டர் பழனிச்சாமி, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநராகவும், அந்தப் பதவியில் இருந்த கே.பாஸ்கரன், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரி உதவி கலெக்டர் சிவனருள், புதிதாக தொடங்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட சிறப்பு அதிகாரியாகவும், வடசென்னை மண்டல துணை ஆணையராக உள்ள திவ்யதர்ஷினி, ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அதிகாரியாகவும், ஊரக கல்வித்துறை இயக்குநராக உள்ள விஜயகார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட கலெக்டராகவும், பெண்கள் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக இருந்த பிரவீன் நாயர், நாகப்பட்டினம் கலெக்டராகவும், பொதுத்துறை துணை செயலாளராக இருந்த மோகன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையராகவும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை திட்ட இயக்குநராக இருந்த செந்தில்ராஜ், தேசிய சுகாதார அமைப்பு இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொழில் முனைவோர் மேம்பாடு இயக்குநராக இருந்த நாகராஜன், தேசிய சுகாதார திட்ட இயக்குநராகவும், பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளராக இருந்த ஆனி மேரி ஸ்வர்ணா, மருத்துவ தேர்வாணைய தலைவராகவும், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளராக இருந்த கோவிந்தராஜ், கூட்டுறவு சங்க பதிவாளராகவும் (பொறுப்பு), காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அதிகாரியான நடராஜன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக இருந்த மகேஸ்வரி, நில நிர்வாக கூடுதல் ஆணையராகவும், நாமக்கல் உதவி கலெக்டராக இருந்த கிரந்திகுமார் பாடி, வணிகவரித்துறை இணை ஆணையராகவும் (ஈரோடு மண்டலம்), நாகப்பட்டினம் உதவி கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட (திருவாரூர்) இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டிவனம் உதவி கலெக்டர் மெர்சி ரம்யா, கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும், திருப்பத்தூர் உதவி கலெக்டர் பிரியங்கா, மதுரை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அலுவலராகவும், நாகர்கோவில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அலுவலராகவும், விருத்தாசலம் உதவி கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த், நாகப்பட்டினம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அலுவலராகவும், கஜா புயல் புனரமைப்பு கூடுதல் திட்ட இயக்குநராக இருந்த ராஜகோபால் சுன்க்ரா, கடலூர் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அலுவலராகவும், கஜா புயல் புனரமைப்பு கூடுதல் திட்ட இயக்குநராக இருந்த பிரதீப்குமார், ராமநாதபுரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அலுவலராகவும், கடலூர் உதவி கலெக்டர் சரயு, உதகை மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநராகவும் நியமிக்கப்பட்டனர்.

ஒழுங்கு நடவடிக்கை குழு ஆணையராக இருந்த ஸ்ரேயா பி.சிங், விழுப்புரம் கூடுதல் கலெக்டராகவும், மீன்வளத்துறை இயக்குநராக இருந்த ஜானி டாம் வர்க்கீஸ், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய இயக்குநராகவும், கன்னியாகுமரி மாவட்ட திட்ட இயக்குநராக இருந்த ராகுல்நாத், பொதுத்துறை துணை செயலாளராகவும், உதகை மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அமர் குஷாவா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராகவும், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டராக இருந்த அம்ரீத், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையராகவும், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை துணை செயலாளர் ஜெயசந்திரபானு ரெட்டி, பழனி தண்டாயுதபாணி சாமி கோயில் இணை ஆணையராகவும், தமிழ்நாடு ஊரக உள் கட்டமைப்பு நிதிச் சேவை முதன்மை செயலாளராக இருந்த காக்கர்லா உஷா, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக கூடுதல் செயலாளராகவும், சேரன்மகாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், வட சென்னை மண்டல துணை ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார், சிறுபான்மை நலத்துறை இயக்குநராகவும், வெளிநாட்டு பயிற்சி முடித்து திரும்பும் அனு ஜார்ஜ், தொழில் மற்றும் வர்த்தக ஆணையராகவும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக, தலைவர் ரமேஷ் சந்த் மீனா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை செயலாளராகவும், மத்திய ஊரக வளர்ச்சித்துறை உதவி செயலாளராக இருந்த எம்.பிரதாப், தர்மபுரி மாவட்டம் அரூர் உதவி கலெக்டராகவும், மத்திய நிதித்துறை உதவி செயலாளராக இருந்த சி.தினேஷ்குமார், சிவகாசி உதவி கலெக்டராகவும், மத்திய எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை உதவி செயலாளராக இருந்த சரவணன், மேட்டூர் உதவி கலெக்டராகவும், மத்திய பஞ்சாயத்து ராஜ் உதவி செயலாளராக இருந்த அனு, திண்டிவனம் உதவி கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு உதவி செயலாளராக இருந்த சேக் அப்துல் ரகுமான், குளித்தலை உதவி கலெக்டராகவும், மத்திய வீட்டு வசதித்துறை உதவி செயலாளராக இருந்த பிரதீக் தயாள், சேரன்மகாதேவி உதவி கலெக்டராகவும், மத்திய சமூக நீதித்துறை உதவி செயலாளரான வந்தனா கார்க், திருப்பத்தூர் உதவி கலெக்டராகவும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை உதவி செயலாளராக இருந்த கே.ஜெ.பிரவீன்குமார், விருத்தாசலம் உதவி கலெக்டராகவும், மத்திய நிதி ஆயோக் உதவி செயலாளர் பத்மஜா, முசிறி உதவி கலெக்டராகவும், மத்திய மருத்தகத்துறை உதவி செயலாளர் சினேகா, பெரியகுளம் உதவி கலெக்டராகவும், மத்திய விளையாட்டு மேம்பாட்டுத்துறை உதவி செயலாளர் சுகபுத்ரா, ராமநாதபுரம் உதவி கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : IAS ,Namakkal ,collectors ,Nagapattinam ,Tirupur , Government of Tirupur, Namakkal, Nagapattinam, Tamil Nadu
× RELATED நீலகிரி, மலப்புரத்தில் போதைப்பொருள் கடத்தல்,மது விற்பனை குறித்து ஆலோசனை