×

உயிரியல் ரசாயனத் தாக்குதல்களை எதிர்கொள்வதில் இந்திய ஆயுதப்படைக்குப் போதிய பயிற்சி தேவை: ராஜ்நாத் சிங் பேச்சு

குவாலியர்: வருங்கால போர்களில் ரசாயனம் மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்த ராணுவ படைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இந்த நிறுவனத்தில் சுற்றுச்சூழலை கணக்கில் கொண்டு, சர்வதேச அமைப்பின் உயிர் மருத்துவ மாதிரிகளுடன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஆய்வகம் அமைந்துள்ளது. ஒரு தன்னாட்சி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் இந்திய ஆயுதப்படைக்குத் தேவையான ரசாயனக் கருவிகளை வழங்கி வருகிறது. இதையடுத்து இந்த டிஆர்டிஇ என்ற நிறுவனத்தை தொடங்கி 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது, நாட்டின் செயல்பாடு, உள்கட்டமைப்பை சீர்குலைக்க போரின் எந்த நிலைகளையும் எதிர்தரப்பு பயன்படுத்தக்கூடும் என்று கூறினார். எனவே, உயிரியல் ரசாயனத் தாக்குதல்களை எதிர்கொள்வதில் நமது ஆயுதப்படைக்குப் போதிய பயிற்சி தேவை எனவும் தெரிவித்தார். ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் வாழ்க்கை, சுகாதாரம், சொத்து மற்றும் வர்த்தகம் ஆகிய அனைத்தும் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மீண்டும் அவற்றையெல்லாம் மீட்க வேண்டுமானால் அதற்கு நீண்டகாலங்கள் தேவை என கூறினார். இருப்பினும், எதிரிநாடுகள் நம் நாட்டின் மீது ரசாயன ஆயுதங்களை கொண்டு போர் தொடுக்க நேரிட்டால், அதற்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுத படைக்கு தகுந்த பயிற்சிகளை கொடுக்க வேண்டும் எனக் அவர் தெரிவித்தார். மேலும், டிஆர்டிஇ நிறுவனத்தின் ரசாயன தயாரிப்புகளில் பல இந்திய ராணுவ ஆயுதப்படைகளில் பயன்படுத்தி வருவது மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என தெரிவித்தார்.

Tags : armed forces ,Rajnath Singh ,Indian ,attacks , Biological Chemical Assault, Indian Armed Forces, Training, Demand, Rajnath Singh
× RELATED அரியலூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!!