×

கோவையில் யானை வழித்தடங்களை மீட்கக் கோரிய வழக்கு : முதன்மை வனப்பாதுகாவலர் பதில் தர உத்தரவு

சென்னை: கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்க உத்தரவிடக்கோரிய வழக்கில் முதன்மை வனப்பாதுகாவலர் உள்ளிட்டோர் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சத்தியநாராயணன், ஷேஷசாயி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்க உத்தரவிடக்கோரி முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில்,செங்கல் சூளைகளால் யானை வழித்தடங்கள் தடைபட்டுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகளால் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 27 பேர் யானை தாக்கி பலியாவதாக மனுதாரர் சுற்றிக் காட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேஷசாயி அமர்வு முதன்மை வனப்பாதுகாவலர், கனிம வளத்துறை செயலாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியார் ஆகியோர் பதில் தர உத்தரவு பிறப்பித்துள்ளனர். கோவையில் யானை வழித்தடங்களை கண்டறிந்து அதனை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்பதும் மனுதாரரின் கோரிக்கை ஆகும். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Kovil in Elephant Trails of Restoration ,restoration ,Coimbatore , High Court, Elephant, Ways, Forest Guard
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு