×

வேளாண்மைத்துறைக்கு சுமார் ரூ.133 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!!

சென்னை :  வேளாண்மைத்துறைக்கு சுமார் ரூ.133 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.19 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறை ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதே போல் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சானுரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விரிவுரை அரங்கம் மற்றும் ஆய்வகத்தை திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 14 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் படிக்கும் மையங்கள், தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் மூலமாக நபர்ட் வங்கியின் நிதியுதவியுடன் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் 31 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டிடங்கள், எடை மேடைகள், குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்டவைகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், விளாத்திக்குளம், புதூர் ஆகிய இடங்களில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் 10 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டிடங்கள், விவசாயிகளுக்கான பயிற்சி நிலையம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லுர் ராஜு, துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.காஞ்சிபும், திருள்ளூர் மாவட்டங்களில் ரூ.68.80 கோடியில் முடிவுற்ற வெள்ளத் தடுப்பு பணிகளை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்துள்ளார். அதேபோல், 25,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5.44 கோடியில் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட பெட்டகங்கள் வழங்கும் திட்டத்தை 7 கட்டுமான தொழிலாளர்களுக்கு பெட்டகங்கள் வழங்கி முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.

Tags : Palanisamy ,buildings ,Agriculture Department , Department of Agriculture, Chief Palanisamy, Equipment, Warehouses
× RELATED மருத்துவ நிபுணர் குழுவுடன்...