×

அசோகா நகர் சாலை விரிவாக்கத்திற்காக மின்கம்பங்கள் இடமாற்றம்

தங்கவயல்: நீண்ட வருடங்களாக சாலையோர ஆக்கிரமிப்பு பிரச்னையால் இழுபறி நிலையில் இருந்து வந்த அசோகா நகர் சாலை விரிவாக்கப்பணிக்காக மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, சாலையோரம் புதிய கம்பங்கள் நடப்பட்டது. கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 26ம் தேதி, போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி.இயந்திரங்கள்  மூலம் அசோகா நகர் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து தள்ளினர். பல வருட ஆக்கிரமிப்புகள் இடிக்கப்படுவதை காண ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். பல வருட அவதி தீர்ந்தது என்று மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த பிறகும் சாலை புனரமைப்பு பணி ஆமை வேகத்தில் மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. இதனால் இரு புறமும் இடிக்கப்பட்ட இடிபாடுகளில் உள்ள மண் சாலையில் மிகுந்த சிரமத்துக்கு இடையில் இன்றும் போக்குவரத்து இயங்கி வருகிறது. எப்போது தான் அசோகா நகர்  சாலைக்கு விடிவு காலம் பிறக்குமோ.? புனரமைப்பு பணி நிறைவடைந்து பிரச்னை தீருமோ.? என்று பொது மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சாலையோரம் இருந்த மின் கம்பங்கள் நேற்று அகற்றப்பட்டது. சாலை புனரமைப்பிற்கு ஏதுவாக சாலையோரம் புதிய மின் கம்பங்கள் நடப்பட்டது. விரைவில் தார் ஊற்றும் பணி தொடங்கும் என தெரிகிறது….

The post அசோகா நகர் சாலை விரிவாக்கத்திற்காக மின்கம்பங்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Ashoka Nagar Road ,Thangavyal ,Ashoka Nagar ,Dinakaran ,
× RELATED பங்காருபேட்டையில் வியாபாரியிடம் 2.5...