×

உலக மல்யுத்தம் பஜ்ரங், ரவிகுமார் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

நூர் சுல்தான்: உலக மல்யுத்த போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியதால் இந்திய வீரர்கள் பஜ்ரங் புனியா, ரவிகுமார் ஆகியோர்  ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர். கஜகஸ்தானில் உலக மல்யுத்த போட்டி நடக்கிறது. அதில் ஆண்களுக்கான 65கிலோ பிரிவில்  இந்தியாவின் பஜ்ரங் புனியா  காலிறுதியில்  கொரியாவின்  ஜாங் சென்னை 8-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். அதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றதுடன் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். அரையிறுதியில் கஜகஸ்தானின் தவுலத் நியாஸ்பெகோவுடன் மோதினார். அதில் 9-9 என்ற புள்ளிகளில் புனியா சமநிலை கண்டார். ஆனால் விதிகளின் அடிப்படையில் தவுலத் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

அதேபோல் 57 கிலோ பிரிவு காலிறுதியில்  இந்தியாவின் ரவிகுமார், உலக சாம்பியன் ஜப்பானின் யுகி  டஹாகசியை 6-1 என்று புள்ளிகணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். கூடவே ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிப் பெற்றார். ஆனால் அரையிறுதியில் ரஷ்யாவின்  உக்கேவிடம் 4-6 என்ற புள்ளி கணக்கில் தோற்றார்.  இதில் பெண்களுக்கான 62கிலோ பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக் நேற்று நைஜிரியாவின்  அமினத் ஒலுவாஃபன்மிலயோ உடன் மோதினார். அதில் 7-10  என்ற புள்ளிகள் கணக்கில் சாக்‌ஷி தோற்று  போட்டியில் இருந்து வெளியேறினார்.  ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை திவ்யா காக்ரன் 68கிலோ பிரவில் ஜப்பானின்  சாரா டோஷோவிடம் தோற்றார்.

Tags : World Wrestling Bajrang ,Ravikumar ,Olympics , World Wrestling, Bajrang, Ravikumar, Olympic competition
× RELATED இந்தியா ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் டெண்டுல்கர்