சீனா ஓபன் பேட்மின்டன் கால் இறுதியில் சாய் பிரனீத்: 2வது சுற்றில் வெளியேறினார் சிந்து

பெய்ஜீங்: சீன ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின்  சாய் பிரனீத் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற,  பி.வி.சிந்து 2வது சுற்றிலேயே தோற்று வெளியேறினார். சீனா ஓபன்  சூப்பர்1000 பேட்மின்டன் போட்டி சீனாவின் சாங்ச்சூ நகரில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில்  இந்தியாவின் சாய் பிரனீத்,  சீனாவின் லு குவாங் சூ உடன் மோதினர். அதில் 21-19, 21-19 என்ற நேர் செட்களில் அசத்தலாக வென்றார். உலக அளவில் பிரனீத் 15வது நிலையிலும், லு 21 வது நிலையிலும் இருக்கின்றனர்.பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து உடன்,   தாய்லாந்தின் போர்ன்பவீ சோசூவாங் மோதினார். அதில் முதல் செட்டை அசத்தலாக வென்ற சிந்து அடுத்த 2 செட்களை போர்ன்பவீயிடம்  இழந்தார். அதனால் போர்ன்பவீ 21-12, 13-21, 19-21 என்ற செட்களில் சிந்துவை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

உலகின் 5ம் நிலை வீராங்கனையான சிந்து உலகின் 15ம் நிலை வீராங்கனையிடம் தோற்று ேபாட்டியில் இருந்து வெளியேறினார். சமீபத்தில் நடந்த உலக பேட்மின்டன் சாம்பியன்  போட்டியில் சிந்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் தங்கம்: சிந்துவின் இந்திய பயிற்சியாளர் கோபிசந்த் நேற்று, ‘பிரேசில் ஒலிம்பிக்கில் வெள்ளிபதக்கம் வென்றார் சிந்து.  அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கட்டாயம் தங்கம் வெல்வார்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>