×

மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு பின்னணி பாஜ.வுக்கு எதிரான நிலையை மாற்றிக்கொண்டாரா மம்தா?

புதுடெல்லி: எலியும், பூனையுமாக இருந்தநிலையில், டெல்லி வந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருப்பதன் மூலம், பாஜ.வுக்கு எதிரான தனது நிலையை அவர் மாற்றிக் கொண்டுவிட்டாரோ என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தொட ர்ந்து பாஜ.வையும், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து விஷயங்களிலும் எதிர்த்து வந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக அவர், டெல்லி வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மேற்குவங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்றவும், நிலக்கரி சுரங்கத்தை திறந்து வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறினார்.

இதேபோல் நேற்று, டெல்லியில் உள்ள நார்த் பிளாக் அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். பின்னர், மம்தா அளித்த பேட்டியில், ‘‘அசாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில், வங்காள மொழி பேசும் மக்கள், இந்தி பேசும் மக்கள், கூர்க்கர்கள், அசாம் இன மக்கள் பலர் விடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்யும்படி உள்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன். மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி விவாதிக்க நான் இங்கு வரவில்லை,’’ என்றார். மோடியையும், அமித்ஷாவையும் தொடர்ந்து எதிர்த்து வந்த மம்தா, டெல்லிக்கு வந்து இவர்கள் இருவரையும் சந்தித்துள்ளதன் மூலம் பாஜ.வுக்கு எதிரான தனது நிலையை அவர் மாற்றிக் கொண்டு விட்டாரோ என்று கேள்வி எழுந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மம்தா பானர்ஜி நிலையில், வரும் சில நாட்களில் தெளிவாகிவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : Amit Shah Mamta Modi ,Amit Shah , Mamta Modi, Amit Shah
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...