×

பள்ளி கல்வித்துறையில் இயக்குநர்கள் மாற்றம்: முதன்மை செயலாளர் அதிரடி

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் மீண்டும் 3 இயக்குநர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் தான் பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டு இந்த இடத்துக்கு கண்ணப்பன் இயக்குநராக  பொறுப்பேற்றார்.

இந்நிலையில் மீண்டும் இயக்குநர்களை மாற்றி பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட உத்தரவு:  மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநராக கடந்த மாதம் பொறுப்பேற்ற ராமேஸ்வர முருகன் மீண்டும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி மீண்டும்  மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநராகவும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் சேதுராமவர்மா தொடக்க கல்வி இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதால் மேற்கண்ட 3  இயக்குநர்களும் இன்றே அந்தந்த பதவிகளில் பொறுப்பேற்க உள்ளனர்.

Tags : Directors ,School Education ,Principal Secretary Action , Change , Directors,School Education
× RELATED பள்ளிக்கல்வித்துறையில்3 இணை இயக்குநர்கள் அதிரடியாக மாற்றம்