மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.6ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு

சென்னை: திமுகவின் ஆக்கப்பணிகள், சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை குறித்து வரும் அக்டோபர் 6ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 6.10.2019 ஞயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும். திமுக ஆக்கப்பணிகள், சட்டதிட்ட  திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்படும். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது, பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : DMK ,committee meeting ,committee ,MK Stalin ,MK Stalin DMK , MK Stalin, DMK, general committee,
× RELATED தேர்தல் கல்வியறிவு குழு கூட்டம்