முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைப்பு

சென்னை: முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை முதன்மைச் செயலாளர் குழுவின் உறுப்பினர் செயலராக செயல்படுவார். ஒரு மாதத்திற்கு மேலாக நிலுவையில் உள்ள அனுமதிகளுக்கு இக்குழு தீர்வு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் முதலீட்டாளர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி நிலையில் சிறப்பு அலுவலரை கொண்டு முதலீடுகளை எளிதாக்கும் பிரிவு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>