×

குமரி கடற்கரையில் 3 மாத குழந்தை சடலம்: வீடு வீடாக போலீஸ் விசாரணை..2 நாளில் பிரேத பரிசோதனை

ஈத்தாமொழி: குமரி கடற்கரையில் கிடந்த 3 மாத குழந்தை குறித்து போலீசார் வீடு வீடாக சென்று தீவிரமாக விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜாக்கமங்கலம் அருகே பொழிக்கரை கடற்கரை சாலையில் நேற்று மதியம் சுமார் 3 மாதமே ஆன ஒரு குழந்தையின்  சடலம் அழுகி காய்ந்த நிலையில் கிடந்தது. ஈத்தாமொழி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கீதா புகார் அளித்தார். அதன் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் சடலம் உருக்குலைந்து இருந்ததால் அது ஆணா? பெண்ணா?  என்பதை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. நாய் கடித்ததில் குழந்தையின் கை மற்றும் உறுப்புகளும் இல்லை.

இந்த நிலையில் நேற்று பொழிக்கரை, பெரியகாடு, ராஜாக்கமங்கலம்துறை ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று போலீசார் விசாரணை நடத்தினர். சப்-இன்ஸ் பெக்டர் அஜ்மல் அனிஸ் தலைமையிலான போலீசார் இந்த விசாரணையை மேற்கொண்டனர். நீண்ட நேர விசாரணைக்கு பிறகும் குழந்தைக்கு யாரும் சொந்தம்  கொண்டாடவோ அல்லது தெரியும் என்றோ சொல்லவில்லை. ஆகவே வேறு பகுதியில் யாராவது குழந்தையை கடலில் வீசி இருக்கலாம் என்றும், கடலில் அலையில் இழுக்கப்பட்டு இங்கு வந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். இது ஒருபுறம் இருக்க பிரேத பரிசோதனை இன்னும் 2 நாட்களுக்கு பிறகே நடக்க இருக்கிறது. அதன் பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags : Kumari ,infant ,beach , Kumari, beach, baby, corpse, inquiry, autopsy
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...