×

விக்ரம் லேண்டர் பற்றி நாசா அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை : இஸ்ரோ விஞ்ஞானி

கோவை: விக்ரம் லேண்டர் பற்றிய எந்த தகவலையும் நாசா தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தரவில்லை என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் குளத்துப்பாளையத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட் நர்சிலில் பயன்படுத்தப்படும் கார்பன் துணி தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி சோம்நாத் விக்ரம் லேண்டரில் தகவல் கிடைக்க இருந்த 15 நாட்களில் ஏற்கனவே 14 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் ஒருநாள் மட்டுமே மீதம் உள்ளதாக கூறினார்.

இதுவரை விக்ரம் லேண்டர் பற்றிய தகவலோ புகைப்படமோ இன்னும் கிடைக்க வில்லை என்று அவர் குறிப்பிட்டார். விக்ரம் லேண்டர் பற்றிய எந்த தகவலையும் நாசா தங்களுக்கு அனுப்பவில்லை என்றும் , சந்திரயான்-2 பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அது பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என்று சோம்நாத் தெரிவித்தார். ராக்கெட் தயாரிப்பதற்கான உபகரணங்கள் தயாரிப்பது மற்றும் வாங்க மத்திய அரசால் குறைந்த பணமே ஒதுக்கப்படுவதாகவும், இது பிற நாடுகளுக்கு ஒதுக்கப்படுவதில் 10% சதவீதம் கூட இல்லை என்று விஞ்ஞானி சோம்நாத் வருத்தம் தெரிவித்தார்.


Tags : Vikram Lander ,ISRO ,NASA , Vikram Lander, NASA, no information, ISRO
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு