×

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 54 லட்சம் மதிப்புள்ள 1433 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் ரூ. 54 லட்சம் மதிப்புள்ள 1433கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் இருந்து நேற்றிரவு திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை உதவி ஆணையர் பண்டாரம் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியை சேர்ந்த பஷீர் அகமது என்பவர் 46.85 லட்சம் மதிப்புள்ள 1247கிராம் எடைக்கொண்ட வண்ணம் பூசிய 22 தங்ககாசுகள் மற்றும் கட்டக்கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அதே விமானத்தில் பயணம் செய்த திருவாரூரை சேர்ந்த முகமது சுலைமான் என்பவர், தனது உடைமையில் 186 கிராம் எடைக்கொண்ட 5 வளையல்கள் மற்றும் கைசையினை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து முகமது சுலைமானை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடமும் பஷீர் அகமதுவிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Trichy Airport , Trichy Airport, Rs. 54 lakhs worth, 1433 grams , smuggled gold, seized
× RELATED பல கோடி வருவாய் ஈட்டி தந்த திருச்சி...