×

சென்னையில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மண்ணடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஜெரினா பானு என்ற பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மண்ணடி அய்யப்பன் செட்டி தெருவை சேர்ந்தவர் ஜெரினா பானு. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் நேற்றிரவு தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது விடிய விடிய பெய்த கனமழை காரணமாக இன்று அதிகாலை அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஜெரினா பானு சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள்  உயிரிழந்த ஜெரினா பானுவின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் சேதமடைந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரின் விசாரணையில் ஜெரினா பானு தங்கியிருந்த வீடானது மிக பழமையான ஓட்டு வீடு என்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலும் மண்ணடி பகுதியில் இதுபோன்று பழமையான வீடுகள் இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி நிகழ்ந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தீயணைப்பு துறை சார்பில் இதுபோன்ற வீடுகளை இடிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியும் இன்றளவும் மண்ணடி பகுதியில் நூறாண்டுகளுக்கு மேலாக பழமையான வீடுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே காவல் துறையினரும், தீயணைப்புத்துறையினரும் இதுபோன்ற வீடுகளில் வசிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தும் பொதுமக்கள் இதுபோன்ற வீடுகளில் வசித்து வந்ததால் இந்த உயிரிழப்பானது ஏற்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : deaths ,Chennai , Madras, heavy rains, wall of the house, falling, female casualties
× RELATED கோட்டா பயிற்சி மையத்தில் படித்த...