×

மத்திய அமைச்சகங்கள், துறைகள் புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது மத்திய அரசு

டெல்லி: மத்திய அமைச்சகங்கள், துறைகள் புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது. டெல்லி: இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையானது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில்  பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நடப்பு ஆண்டின் முதல் 4 மாதங்களில் கார், பைக் உள்ளிட்ட பயணிகள் வாகன உற்பத்தி 13 புள்ளி 8 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளதாகவும் சியாம் கூறியுள்ளது.

முன்னணி நிறுவனங்களான மாருதி சுசுகி, மஹிந்தரா அண்டு மஹிந்தரா, டொயோட்டோ கிர்லோஸ்கர், ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது அதன் அடிப்படையில் மத்திய அமைச்சகங்கள், துறைகள் புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது. வாகனங்கள் வாங்க சில ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது.

கடும் வீழ்ச்சியில் இருந்து ஆட்டோ மொபைல் துறையை மீட்கும் முயற்சியாக தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு வாகனம் தேவையோ அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. செலவினங்களை குறைப்பதற்காக புதிய வாகனங்களை வாங்க மத்திய அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Departments ,government ,Union ,purchase ,Union Ministries ,ministries , Federal Ministries, Department, New Vehicle, Federal Government
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...