×

துரதிர்ஷ்டவசமாக ஒரு மொழியை கொண்டுவர முடியவில்லை ஒரு பொதுவான மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் : ரஜினி பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழகத்தில் இந்தியை ஏற்க மாட்டார்கள். நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஒரே மொழி தேவை என்று ரஜினி கூறியுள்ளார். புனேவில் ‘தர்பார்’ படப்பிடிப்பு இன்று நடக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.45 மணி விமானத்தில் மும்பை புறப்பட்டு சென்றார். முன்னதாக, அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டி: உங்கள் பேனர்கள் வைக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க இருக்கிறீர்களா?
பேனர்கள் எல்லாம் வைக்கக்கூடாது என்று ரசிகர்களுக்கு ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். பேனர் விபத்தில் உயிரிழந்த சுப வீட்டிற்கு செல்வீர்களா? சுப வீட்டிற்கு இப்போது செல்வதற்கான வாய்ப்பு எனக்கு இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரே நாடு ஒரே மொழி என்று கூறியது பற்றி உங்களது கருத்து என்ன? நம்ம நாடு மட்டுமல்ல, உலகில் எந்த நாடாக இருந்தாலும் ஒரு பொதுவான மொழி இருந்தால்தான் அந்த நாட்டின் ஒற்றுமைக்கு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் ஒரு பொதுவான மொழி என்று எதையும் கொண்டுவர முடிவதில்லை.

அதனால் எந்த ஒரு மொழியையும் இங்கு கொண்டுவந்து திணிக்க முடியாது. முக்கியமாக இந்தி மொழியை இங்கு கொண்டு வந்து திணிக்க முடியாது. அவ்வாறு திணிப்பதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி தென் இந்தியாவில் உள்ள எந்த ஒரு மாநிலமும் அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். தென் இந்தியாவில் மட்டும் இன்றி வட நாட்டிலும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், பாஜவின் தமிழக தலைவராக உங்கள் பெயர் அடிபடுகிறதே என்ற நிருபரின் கேள்வியை நடிகர் ரஜினிகாந்த் காதில் வாங்கிக் கொள்ளாமல் வேகமாகச் சென்று விட்டார்.

Tags : country ,Rajini , Unfortunately ,no common language that, support a country's development, Rajini
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...