×

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை இஸ்ரேல் தேர்தலில் மீண்டும் ‘சொதப்பல்’: நெதன்யாகு, பென்னிக்கு தலா 32 இடங்கள்

ஜெருசலம்: இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் மீண்டும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் நெதன்யாகுவின் கட்சிக்கும், முன்னாள் ராணுவ தலைவர் பென்னி கண்ட்சின் கட்சிக்கும் தலா 32 இடங்கள்  மட்டுமே கிடைத்துள்ளன.இஸ்ரேலில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. பிரதமரான நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கும், முன்னாள் ராணுவ தலைவர் பென்னி கண்ட்ஸின் ப்ளூ மற்றும் வொய்ட் கூட்டணி கட்சிகள் இடையே கடுமையான போட்டி  நிலவியது. நெதன்யாகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா? அல்லது ப்ளு அண்ட் வொய்ட் கூட்டணி ஆட்சி அமைக்குமா? என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தேர்தலுக்கு முன்னதாக நடந்த கருத்து கணிப்பில் மொத்தமுள்ள 120 இடங்களில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 55 முதல் 57 இடங்களில ெவற்றி பெறும் என்றும், ப்ளு அண்ட் வொயிட் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களில்  ெவற்றி பெறுவது சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. 90 சதவீத வாக்குகள் எண்ணிக்கை முடிந்துள்ளது. இதன் முடிவில், லிகுட் கட்சியும்,  ப்ளு அண்ட் வொய்ட் கட்சியும் தலா 32 இடங்களை கைப்பற்றியுள்ளன. மதசார்பற்ற  இஸ்ேரல் பெயிட்னு கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அராப் இஸ்ரேல் கட்சிகளின் கூட்டணி 12 இடங்கள், அல்ட்ரா ஆர்த்டெக்ஸ் ஷாஸ் 9 இடங்களில் வென்றுள்ளன. மேலும், ஐக்கிய தோரா ஜூடைசம் 8, யாமினா 7, லேபர் ெகஸ்சர்  6, டெமாக்ரடிக் கேம்ப் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மதசார்பற்ற இஸ்ரேல் பெய்ட்னு கட்சியின் தலைவர் லிபர்மென் கூறுகையில், “ஒரே ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அதுதான் மத்தியில் சுதந்திரமான கூட்டணி ஆட்சி அமைப்பது. லிகுட் கட்சி, ப்ளு  அண்ட் வொய்ட் மற்றும் மதசார்பற்ற இஸ்ரேல் பெயிட்னு கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற வேண்டும்,” என்றார். இதனிடையே கூட்டணி ஆட்சி அமைக்கும் ஆலோசனையை நெதன்யாகு நிராகரித்து விட்டதாக ஊடகங்களில் செய்தி  வெளியாகி உள்ளது.

இஸ்ரேலில் கடந்த 5 மாதங்களுக்கு முன் நடந்த நாடாளுமனற தேர்தலிலும் இதேபோல் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது. அப்போது, கூட்டணி ஆட்சி அமைக்கவும் பிரதமர் நெதன்யாகு மறுத்து விட்டார். இதனால்,  நாடாளுமன்றத்துக்கு மீண்டும் தேர்தலை அறிவித்தார். அதன்படி, நேற்று முன்தினம் நடந்த தேர்தலிலும் யாருக்கும் வெற்றி கிடைக்–்காமல் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளதால், மீண்டும் இந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags : Israeli ,Netanyahu ,Penny ,election ,Nobody , Nobody,majority, Netanyahu ,Penny ,each
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...