×

ஓட்டல் அறைக்கு வரி பரிசீலனை செய்ய முடிவு

புதுடெல்லி: ஓட்டல் அறைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியை மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, சுற்றுலா துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.7,500க்கு மேல் வாடகை உள்ள ஓட்டல் அறைகளுக்கு ஜிஎஸ்டி 28 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. 2,500 முதல் 7,500 வரை வாடகை உள்ள அறைகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

இதனால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரியை குறைக்க கேரளாவில் 2 நாள் முன்பு நடந்த சுற்றுலா துறை அமைச்சர்கள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று, ஒடிசா சுற்றுலா துறை மாநாட்டில் பங்கேற்ற சுற்றுலா துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் ரூபிந்தர் பிரார் இதுகுறித்து கூறுகையில், ‘‘சுற்றுலாத்துறை நன்மை கருதி மத்திய அரசு ஓட்டல் அறை வாடகை ஜிஎஸ்டியை குறைப்பது  குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் பரிசீலனை செய்யும்’’ என்றார்.



Tags : hotel room , Line , room, Decision , review
× RELATED ஓட்டல் அறையில் வருங்கால கணவருடன்...