×

பல்வேறு கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் நேற்று திமுகவில் இணைந்தனர்.  காஞ்சிபுரத்தை சேர்ந்த அமமுக, பாமக, தேமுதிக, புரட்சி பாரதம், பாஜ உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் அமமுக கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் உத்திரமேரூர் தயாளன் தலைமையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுகவில் இணைந்தனர்.  காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், சூணாம்பேடு ஊராட்சியைச் சேர்ந்த  பாலமுருகன், மாம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த சிவகுமார், அகரம் ஊராட்சியைச் சேர்ந்த ஏழுமலை, பொலம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இன்பசெல்வன், சித்தாமூர் ஊராட்சியைச் சேர்ந்த சீமாத்தான், புத்திரன்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த ஜி.பிரசன்னகுமார், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம்,

சிறுபேர் ஊராட்சியைச் சேர்ந்த கிளைச் செயலாளர் கே.முத்து உட்பட 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.  பாஜ கட்சியைச் சேர்ந்த ஒன்றிய மகளிர் அணி  தலைவர் கே.அம்பிகா, அமமுக கட்சி காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட வர்த்தகப் பிரிவு துணைச் செயலாளர் ஆர்.குமரகுரு, மாவட்ட வர்த்தகப் பிரிவு பொருளாளர் சி.மோகன், மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் டி.எஸ்.வேலன், மாவட்ட இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ஆர்.சிவாணி, அமமுக கட்சியின் உத்திரமேரூர்  பேரூரைச் சேர்ந்த பேரூர் அவைத்தலைவர் வி.எம்.மணி, துணைச் செயலாளர் ஏ.மோகன், இணைச் செயலாளர் கே.சுமதி, பொருளாளர் டி.சுப்பிரமணியன்,  மேலமைப்பு பிரதிநிதி எஸ்.கவுசல்யா இளைஞர் பாசறை இணைச் செயலாளர் எஸ்.ஹரிஹரன் திமுகவில் இணைந்தனர்.

அதேபோன்று புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த இ.தினேஷ், கே.ராஜசேகர், என்.சதிஷ்குமார், டி.இளங்கோவன், உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தங்கள் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.  நிகழ்ச்சியில், திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்பி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் ஆர்.டி.அரசு, ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், சரவணன், வி.ஏழுமலை, கண்ணன், இரா.நாகன் மற்றும் பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல், பி.சசிகுமார், ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.Tags : DMK ,MK Stalin ,parties , DMK Stalin, DMK leader
× RELATED கலைஞர் பிறந்தநாளில் மக்களுக்கு உதவி...