×

கலசப்பாக்கம் அருகே ஆதிதிராவிடர் நல பள்ளியில் குடிநீர் தேடி அலையும் மாணவர்கள்: நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே உள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் குடிநீர் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் குடிநீர் வசதிக்காக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆழ்த்துளை கிணறு, மின்மோட்டார், சின்டெக்ஸ் டேங்க் ஆகியவை கடந்த ஓராண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால் பயன்பாட்டுக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே மின் மோட்டார் பழுதடைந்ததால் மாணவர்கள் இதுநாள் வரை அதனை பயன்படுத்த முடியவில்லை.

மேலும் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வராதது வேதனைக்குரியதாக உள்ளது. மாணவர்களுக்கு குடிநீர் தேவையெனில் அருகாமையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து ெகாண்டு வருகின்றனர். அதேபோல் சத்துணவு கூடத்தில் சமையல் செய்வதற்கும் வெளியில் இருந்து குடிநீர் கொண்டுவரும் அவல நிலை நீடிக்கிறது. எனவே ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து உடனிடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Parents ,welfare school ,Kalasapakkam , Kalasakpakkam, Adivasi welfare school, Drinking water, Students
× RELATED சாலை வளைவில் கவிழ்ந்த தனியார் பள்ளி...