×

இந்தியாவின் அதிநவீன அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி: போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

ஒடிசா: கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி பெற்றது. ஒடிசா கடற்கரைக்கு அப்பால் 90கி.மீ தொலைவில் இருந்த இலக்கை குறிதவறாமல் அஸ்திரா ஏவுகணை தாக்கியது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. விமானப்படையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து சோதனையை நடத்தியதாக டிஆர்டிஓ தகவல் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

வானில் உள்ள இலக்குகளை வானில் இருந்தபடியே குறி வைத்து தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணை அஸ்திரா, சுகோய் 30 ஐ ரக போர் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. ஏற்கனேவே நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையில் வெற்றியை கண்டது. இந்த வெற்றிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்று மூன்றாம் கட்ட சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் ஒடிசா கடற்கரைக்கு அப்பால் 90கி.மீ தொலைவில் இருந்த இலக்கை குறிதவறாமல் அஸ்திரா ஏவுகணை தாக்கி அசத்தியது. நாட்டின் பாதுகாப்புத் துறையை பலப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை கொள்முதல் செய்து வரும் இந்தியா, அதேவேளையில் உள்நாட்டிலேயே ஏவுகணைகள் மற்றும் புதுரக ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. அதிநவீன அஸ்திரா ஏவுகணை முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Fighter Aircraft ,Phase 3 ,India , India, Sophisticated Astro Missile, Phase 3 Trial, Success
× RELATED வாக்குச்சாவடி வாரியாக 3ம் கட்ட பணி...