×

இஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்: எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கண்ட்ஸ் பேச்சு

இஸ்ரேல்: இஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயாராக இருப்பதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கண்ட்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக செவ்வாய்க்கிழமை பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. சுமார் 92% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இஸ்ரேல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு முன்னர் வெளிவந்த கருத்துக் கணிப்பு முடிவுகளில் முன்னாள் ராணுவத் தலைவரான பென்னி கண்ட்ஸின் புளூ மற்றும் வெள்ளைக் கூட்டணி மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசு அமைவதில் சிறிய கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெதன்யாகு கட்சி 55 -57 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்து வருவதாக புளூ மற்றும் வெள்ளைக் கூட்டணிக் கட்சியின் தலைவர் பென்னி கண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கட்சித் தலைமையகத்தில் பென்னி கண்ட்ஸ்  இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களுடனுன் பேசத் தயாராக இருக்கிறேன். இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், தேசியவாத மதச்சார்பற்ற பீட்டெய்னு கட்சியின் தலைவருமான அவிக்டர் லிபெர்மன் அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மறுமுனையில் பெஞ்சமின் நெதன்யாகு அனைத்துக் கட்சிகளின் ஆதரவு பெற தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Tags : parties ,Israel ,Penny Kuntz ,Opposition leader , Israeli regime, formation, all party, ready to speak, opposition leader, penny hands, speech
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...