×

குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து போராட்டம்: 22 பேர் கைது!

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் கருப்பு மை கொண்டு அழித்ததால் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக தகவல் தெழில்நுட்பப் பிரிவு செயலாளரான ஞான பிரகாசம் தலைமையில் 22 பேர் கொண்ட குழு திடீரென குடியாத்தம் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து, அங்குள்ள பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை அழித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நாட்டில் ஒரே நாடு ஒரே மொழி என்று மத்திய அரசு வகுத்த கொள்கைக்கு எதிராகவும், மத்திய அரசு நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் இந்தி மொழியில் தேர்வுகள் நடத்தப்படுவதற்கும் பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசை கண்டித்து, திமுக சார்பில், வருகிற 20 ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தெரிவித்திருந்தார். சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய போது, இந்த போராட்ட அறிவிப்பை அவர் வெளியிட்டார். தற்போது, குடியாத்தம் பகுதியில் இந்திக்கு எதிராக வலுக்கும் இந்த போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 22 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது.

Tags : Protesters ,Gudiyatham , Hindi stuffing, settlement, train station, protest, arrest
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல்...