×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் தக்காளி விலை குறைவால் விவசாயிகள் கவலை: சாலையில் கொட்டும் அவலம்

வருஷநாடு: வருஷநாடு அருகே கடமலை மயிலை ஒன்றியத்தில் தக்காளி விளை குறைவால் விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டும் அவலம் தொடர்கிறது. கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வருஷநாடு, தங்கம்மாள்புரம், மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, அய்யனார்புரம், குமணன்தொழு, கோம்பைத்தொழு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தக்காளி விவசாயம் ஏராளமாக நடந்து வருகிறது. இந்த பகுதி விவசாயிகள் தக்காளி விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் தக்காளிகளை பறிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளனர்.

மேலும் சில விவசாயிகள் தக்காளிகளை பறித்துவிட்டு சாலைகளில் கொட்டி வருகின்றனர். மேலும் தக்காளி விலை தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலை போய்க்கொண்டிருக்கிறது. இதில் முதல் இரண்டு மூன்று ரகங்கள் தக்காளி பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடமலை மயிலை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக சில்லரை வியாபாரிகள் மொத்த வியாபாரிகள் குறைந்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தக்காளி விவசாயத்தில் சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தக்காளியை பறித்து சாலைகளில் கொட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த விவசாயத்திற்கு ஆயத்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து விவசாயி ரவி கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக தக்காளி விவசாயம் மிகவும் பாதிப்படைந்து வருகிறது. இதற்கு உரம் பூச்சிமருந்து அதிக விலை கொடுத்து விவசாயம் செய்ய வேண்டிய கட்டாய நிலையில் இருந்து வருகிறோம். இதனால் இந்தாண்டு தக்காளி விலை குறைவின் காரணமாக விவசாயம் மிகவும் நலிவடைந்து விட்டது. இதற்கு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக தக்காளி விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உதவிகள் செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : road ,Kadamalai-Peacock Union , Varusanatu, road, farmers
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...