×

வெப்பநீர்க்கடலில் வளரும் பவளப்பூச்சிகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பவளம் அல்லது பவழம் (coral) என்பது ஒருவகை கடல் வாழ் உயிரினமாகும். குழியுடலிகளைச் சேர்ந்த இவை சல்லி வேர்கள் போன்ற ஏராளமான கால்களைக் கொண்டவை. கடல் நீரில் உள்ள பல்வகை உப்புகளைப் பெருமளவில் பிரித்தெடுத்துத் தங்கள் உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும் இயல்புடையவை. பவளப் பூச்சிகள் பெரும்பாலும் வெப்பநீர்க்கடல்களில் காணப்படுகின்றன. இதனால் வெப்பமண்டல கடல்களில் பவளப் பாறைகள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இவை கடல் நீரிலுள்ள சுண்ணாம்புச் சத்தை உறிஞ்சி கால்சியம் கார்பனேட்டைச் சுரப்பதன் மூலம், கடினமான அடிப்பட்டை ஒன்றைத் தோற்றுவிக்கும். இவை பல கிளைகளைக் கொண்ட மரங்களை ஒத்திருக்கும். இவற்றைப் பவளக்கொடிகள் என்று கூறுவர்.பவளம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இதனால் இது நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

மதிப்புள்ள பவளம் அல்லது செம்பவளம்(Precious coral அல்லது red coral) என்பது கோரல்லியம் ரூப்ரம் (Corallium rubrum) என்ற உயிரினத்தின் பொதுப் பெயராகும். இதன் வெளிப்புற ஓட்டின் அடர் சிவப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறமே இதன் தனித்தன்மையாகும்.
முத்து, பவளம் இரண்டுமே கடலிலிருந்து தோன்றினாலும் அவற்றின் நிறத்தில் மட்டும் வேற்றுமை உண்டே அன்றி வேதியியல் பண்புகளால் அவை ஒன்றேயாகும். இவை இரண்டுமே கடல்வாழ் உயிரினங்களால் உருவாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் தாதுவே ஆகும். இவ்வுயிரினத்தின் ஓடுகள் இயற்கையில் மங்கலாகவே இருக்கும். எனவே, இவற்றை பட்டை தீட்டுதலின் பயனாக மிகுந்த பளபளப்பான பொருளாக மாற்ற முடியும். பவளம் பதித்த ஆபரணங்கள் பண்டைய எகிப்து மற்றும் கிரேக்க நாகரீகங்களில் காணமுடியும்.

Tags : Hot water, sea, coral, sulley roots
× RELATED 21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி;...