×

141வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: 141வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பெரியாரின் 141வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8.45 மணிக்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பெரியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக  இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பேராயர் எஸ்றா சற்குணம், திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன்,  பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கலாநிதி வீராசாமி, சண்முகம், எம்எல்ஏக்கள் பொன்முடி, கு.க.செல்வம், தாயகம் கவி, ரவிசந்திரன், ஆர்.டி.சேகர், முன்னாள் அமைச்சர்கள் ரகுமான்கான், சுந்தரம், வெள்ளக்கோயில்  சுவாமிநாதன், திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், பகுதி செயலாளர் மதன் மோகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, துணை அமைப்பாளர் நுங்கை சுரேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்  ஏராளமானோர்  மரியாதை செலுத்தினர்.

‘உங்கள் சொற்களை ஆயுதங்களாககொண்டே போராடுகிறோம்’
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சுயமரியாதை -பகுத்தறிவு- சமூகநீதி -மொழியுரிமை- இன உணர்ச்சி ஆகிய ஐந்தின் விதைநெல்லாம் அய்யா பெரியாரின் பிறந்தநாள். தத்துவமாய்  எங்களை இயக்கும் உங்கள் சொற்களையே ஆயுதங்களாகக் கொண்டே போராடுகிறோம் அய்யா! பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்! வெல்வோம்! வாழ்க பெரியார்!.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: திமுக சார்பில் பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் பொதுசேவை மேலும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துக்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,Courtesy , In advance , 141st birthday, Courtesy ,MK Stalin
× RELATED மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்