×

பிரதமர் மோடி பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதத்தில், ‘நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உங்களின் சேவை தொடர இறைவன் ஆரோக்கியத்தையும், வலிமையையும் வழங்கட்டும் என கூறியுள்ளார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உங்களின் பொதுசேவை மூலம் இந்தியா உலகின் தலைசிறந்த நாடாக மாறட்டும்.ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி தலைவர்): பிரதமர் மோடி தலைமையில் இந்தியா உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாகும்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நீண்ட ஆயுளை பிரதமருக்கு வழங்குமாறு சர்வவல்லமையுள்ள கடவுளை நான் பிரார்த்திக்கிறேன்.ஜி.கே.வாசன்(தமாகா): பிரதமர் மோடி மேலும் சிறப்போடு செயல்படவும், பல்லாண்டு காலம் நல்ல உடல் நிலையுடன் மகிழ்வுடனும் வாழ தமாகா சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Modi ,birthday , Prime Minister ,Modi's, birthday, leaders
× RELATED 66வது பிறந்தநாள் முதல்வர் எடப்பாடிக்கு ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் வாழ்த்து