×

ஷுப்மான் கில் 92, கருண் நாயர் 78* இந்தியா ஏ ரன் குவிப்பு

மைசூரு: தென் ஆப்ரிக்கா ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது), இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன் குவித்துள்ளது.மைசூரு, நரசிம்ம ராஜா மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் (4 நாள்), டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா ஏ அணி முதலில் பந்துவீசியது. இந்தியா ஏ அணி தொடக்க வீரர்களாக ஈஸ்வரன், ஷுப்மான் கில் களமிறங்கினர். ஈஸ்வரன் 5  ரன் மட்டுமே எடுத்து என்ஜிடி வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார்.அடுத்து வந்த பிரியங்க் பாஞ்ச்சால் 6 ரன் எடுத்து முல்டர் பந்துவீச்சில் டி புருயின் வசம் பிடிபட்டார். இந்தியா ஏ அணி 16.2 ஓவரில் 31 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஷுப்மான் கில் - கருண் நாயர் ஜோடி  பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். இந்த ஜோடி  3வது விக்கெட்டுக்கு 135 ரன் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷுப்மான் கில் 92 ரன் எடுத்து (137 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) சிபம்லா பந்துவீச்சில் முத்துசாமி வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன் (74 ஓவர்) எடுத்துள்ளது. கருண் நாயர் 78 ரன் (167 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் விருத்திமான் சாஹா 36 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள்  ஆட்டம் நடைபெறுகிறது.

Tags : Karun Nair 78 * India A. Run Accumulation ,Shubman Gill 92 ,India A Run Accumulation , Shubman Gill 92, Karun Nair 78 *, India A.
× RELATED சில்லி பாயின்ட்...