மோடியுடன் மம்தா இன்று சந்திப்பு

கொல்கத்தா: கடுமையான கருத்து மோதல்களுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடியை  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் இன்று சந்தித்து பேசுகிறார். இதற்காக நேற்று அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக, கொல்கத்தா விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், “நான் எப்போதாவது தான் டெல்லி செல்வேன். இது, எனது வழக்கமான பணிதான். பிரதமர் உடனான இந்த சந்திப்பின்போது மாநிலத்தின் பெயர் மாற்றம், மாநிலத்துக்கு  வரவேண்டிய நிதி மற்றும் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்டவை குறித்து பேச உள்ளேன். ஏர் இந்தியா, பிஎஸ்என்எல், ரயில்வே துறை உள்ளிட்டவற்றில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இவை பற்றி பிரதமரிடம் பேசுவேன்” என்றார். மேற்குவங்க முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரை கைது செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>