×

சைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விரைவில் வீட்டுமனைப் பட்டா : மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ உறுதி

சென்னை: சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 170வது வார்டு செட்டித்தோட்டம் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக கூறி மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கணக்கெடுக்கும் பணிக்காக அரசு அதிகாரிகள்  வருகை தந்தனர். அப்போது அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்திக்க வேண்டும் என தொலைபேசியில்  தெரிவித்தனர்.
இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் உடனடியாக நேரில் சென்று செட்டித்தோட்டம் பகுதி வருகை தந்து அப்பகுதி மக்களிடம் பிரச்னையை கேட்டறிந்தார்.

அப்போது அவர், பொதுமக்களுக்கு விரைவில் வீட்டுமனை பட்டா அனைவருக்கும் கிடைக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பிரச்னையை தீர்க்க உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது பகுதி செயலாளர்கள் இரா.துரைராஜ்,  எம்.கிருஷ்ணமூர்த்தி, வட்டச் செயலாளர் தா.மோகன்குமார், தா.பாண்டியன், டி.மகிமைதாஸ், எம்.நடராஜ், ஆர்.ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : Mahesh Subramanian MLA ,area ,Saidapet Saidapet ,M Subramanian MLA , Residing ,,homemade ,M Subramanian MLA, confirmed
× RELATED காவல்துறையை ஏமாற்றியதாக நினைக்கும்...