×

உயரழுத்த மின்கோபுர திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகளை கைது செய்வதா?: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

சென்னை: உயர் அழுத்த மின்கோபுர திட்டத்திற்கு எதிரான விவசாய கூட்டமைப்பினரை கைது செய்வதா? என, எஸ்டிபிஐ கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து, தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள்  வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.இதுபோன்ற உயர் அழுத்த மின்கோபுர திட்டங்களால் ஏற்படும் மின்கதிர் வீச்சால், புற்றுநோய் கருச்சிதைவு, மலட்டுத்தன்மை ஏற்படும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அத்திட்டத்திற்கு  விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு மாற்றாகச் சாலை வழியாக புதைவடம் மூலம் திட்டத்தை மேற்கொள்ள அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால்,  விவசாயிகளின் கோரிக்கையை நிராகரிப்பது மட்டுமல்லாமல், எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் மீது ஆங்கிலேயர் கால தந்தி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை சிறையில் அடைத்து வருகின்றது.

விவசாயிகளின் நில உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இத்தகைய தந்தி சட்டத்தை கைவிடக்கோரி, 18ம் தேதி (இன்று) திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு, தந்தி சட்ட நகல் எரிக்கும்  போராட்டத்தை விவசாய கூட்டியக்கத்தினர் அறிவிப்பு செய்திருந்தனர். போராட்டம் நடைபெற உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் சடையம்பாளையத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்காக விவசாய நிலங்களில் நில அளவீடு  செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் கூட்டியக்கத்தின் 5 பேரை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அழைத்து சென்ற காவல்துறை, அவர்களைக் கைது செய்து சிறையில்  அடைத்துள்ளது. இந்த ஜனநாயக விரோத போக்கு கண்டனத்திற்குரியது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : peasants ,party ,SDBI ,microscope project Farmers , Oppose,elite microscope, SDBI Party, Condemns
× RELATED ஜெய்ப்பூரில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் வேதனை