×

காங்கிரசார் பேனர் வைக்க தடை: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் சார்பில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 3 முதல் 9ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் பாதயாத்திரை நடக்க உள்ளது. காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம்தேதி சத்தியமூர்த்தி பவனில் காந்தி சிலை  வைக்கப்படும். 150 அடி உயரத்தில் கொடிக்கம்பமும் நடப்பட உள்ளது.

 உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரே நாடு, ஒரே தேசம் என்று பேசி இருக்கும் கருத்து தேசத்தையே சீர்குலைத்து விடும். காங்கிரஸ் இந்தி மொழியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறது. ஆனால் அமித்ஷா எல்லாவற்றையும்  ஒன்று ஒன்று என்றே சொல்லி வருகிறார். எனவே அமித்ஷா எப்போது தமிழகம் வந்தாலும் காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி காட்டப்படும்.காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் கோவையில் வரும் 30ம்தேதி நடைபெறுகிறது. பேனர் கலாசாரத்துக்கு எதிராக காங்கிரஸ் செயல்படும். காங்கிரஸ் கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்.  இவ்வாறு அவர்  கூறினார்.


Tags : Congress ,Ban: KS Alagiri , Ban , Congress ,banner, KS Alagiri
× RELATED பட்டாசு வெடிக்க தடை நீட்டிப்பு