இலவச மருத்துவ முகாம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் நகர சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் வடக்கு மாட வீதி தெருவில் நேற்று நடைபெற்றது. இதில், சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் சோழன்,  பொன்னிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலாநிதி வீராசாமி எம்.பி, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் எம்எல்ஏ குப்பன் ஆகியோர் மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். முகாமில் 540 பேருக்கு கண் சிகிச்சை, மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. நலிவுற்ற சவர தொழிலாளர்களுக்கு வங்கி மூலம் கடனுதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக கிழக்கு பகுதி செயலாளர்  தி.மு.தனியரசு, சங்க நிர்வாகிகள் குருநாதன், நிர்மல்குமார், செந்தில், சரவணன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Free Medical Camp , Free, Medical, Camp
× RELATED இலவச மருத்துவ முகாம்