×

மாசுக்கட்டுப்பாடு அதிகாரி என கூறி கம்பெனி உரிமையாளரிடம் 5 லட்சம் கேட்டு மிரட்டல்: ஆசாமி கைது

புழல்: செங்குன்றம் அருகே உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனி உரிமையாளரிடம் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி என கூறி 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் குணால் (25). இவர்,  செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் கன்னியம்மன் நகரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை சென்னை மாதவரம் டிமான்டி அவென்யூவை சேர்ந்த சுந்தர்ராஜ் (49) என்பவர் அந்த கம்பெனிக்கு சென்று, ‘நான் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி. உங்கள் கம்பெனி உரிய அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக எனக்கு  தகவல் வந்ததுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

பின்னர், உரிய அனுமதி பெற ₹5 லட்சம் தர வேண்டும் என உரிமையாளர் குணாலை மிரட்டியதாக கூறப்படுகிறது. சுந்தர்ராஜ் நடவடிக்கையில்  சந்தேகம் அடைந்த குணால் செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே இன்ஸ்பெக்டர் ஜவஹர்பீட்டர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தர்ராஜை கைது செய்தனர். இவரிடம், நடத்திய விசாரணையில், மாசு கட்டுப்பாட்டு அதிகாரி என கூறி, பல இடங்களில் பணம் கேட்டு மிரட்டியது  தெரியவந்தது. இவர் மீது செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Tags : company owner ,Assam ,pollution control officer ,arrest ,Asami , Claiming ,pollution control,company owner, Asami's arrest
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...