×

தொழில்நுட்ப கோளாறால் பாக்கு தோட்டத்தில் விழுந்து ஆளில்லா விமானம் நொறுங்கியது

பெங்களூரு: சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆளில்லா விமானம்  தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாக்கு தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற ராணுவ ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டு கழகம் (DRDO), இதற்கு முன் வெளிநாடுகளை சேர்ந்த டிரோன், ஜெட்  உள்ளிட்ட போர் விமானங்கள் நாட்டின் எல்லை பகுதியில் நுழைவதை தடுப்பது  மற்றும் இந்திய ஆயுத தளவாடங்கள் பாதுகாப்பிற்காக ‘‘ ‘‘ஏர்கிராப்ட்  ருஸ்தம்-2 ’’ என்ற ஆளில்லாமல் இயங்கும் விமானம் தயாரித்து வெற்றி பெற்றதின்  மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
கர்நாடக மாநிலம்,  சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள செல்லகெரேவில்  டிஆர்டிஓவுக்கு ஆராய்ச்சி  மையம் உள்ளது. இந்த மையத்தில் நமது நாட்டின் எல்லை பகுதியில் எதிரி நாட்டு  விமானங்களை கண்காணிக்கும் ஆளில்லா விமானங்கள் (டிரோன்) தயாரிக்கப்பட்டு  வருகிறது. அதன் முயற்சியாக தபஸ் 04-19 என்ற பெயரில் டிரோன் தயாரித்தது. இந்த விமானம் எதிரி நாட்டு விமானங்கள் நமது நாட்டு எல்லையில்  நுழைந்தால், உடனடியாக தகவலை கட்டுப்பாட்டு அறைக்கு கொடுப்பதுடன் அதை சுட்டு  வீழ்த்த வேண்டும் என்ற தகவலை ஏவுகணைக்கு தெரிவிக்கும் தகவல் கிடைக்கும்  வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

டிஆர்டிஓ தயாரித்துள்ள டிரோன், நேற்று காலை சோதனைக்காக இயக்கப்பட்டது. செல்லகெரே  ஆய்வு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் இதை இயக்கினர். அவர்கள்  திட்டப்படி குறிப்பிட்ட தூரம் வரை விமானம் சிறப்பாக சென்றது. திடீரென  விமானத்தின் தொடர்பு கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்காமல் போனதால்  விஞ்ஞானிகள் பதறினர். டிரோன் எங்குள்ளது என்ற தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையி,ல்  செல்லகெரே தாலுகா, ஜோடிசிக்கனஹள்ளி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின்  பாக்கு தோட்டத்தில் விமானம் நொறுங்கி விழுந்திருந்தது. இதை பார்த்த  பொதுமக்கள் செல்லகெரே போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக  வந்த போலீசார், டிரோன் விமானம் டிஆர்டிஓவுக்கு சொந்தமானது என்று உறுதி  செய்ததும், அம்மையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக டிஆர்டிஓ  விஞ்ஞானிகள், அதிகாரிகள் விமானம் விழுந்திருந்த ஜோடிசிக்கனஹள்ளி  கிராமத்திற்கு வந்து பார்வையிட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம்  விழுந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காலை நேரம்  என்பதால் பாக்கு தோட்டத்தில் பணியாற்ற தொழிலாளர்கள் வராததால் பெரியளவில்  உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். உடைந்துள்ள  விமானத்தின் உதிரி பாகங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

Tags : Baku ,garden , Aircraft crashed , Baku's garden, technical failure
× RELATED தாவரவியல் பூங்கா புல் மைதானங்களில் புதிய மண் கொட்டும் பணி மும்முரம்