×

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிரடி பேச்சு தமிழகத்தில் எந்த கொம்பனாலும் இந்தியை திணிக்க முடியாது

நாகை: ‘‘இந்தி மொழியை எந்த கொம்பனாலும் தமிழகத்தில் திணிக்க முடியாது’’ என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் அதிரடியாக பேசினார்.
அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்னதிம் இரவு நாகை அவுரித்திடலில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை வகித்து பேசியதாவது: சென்னை ஆர்.கே. நகரில் அமமுகவிற்கு கிடைத்த வெற்றி அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. முதலில் ஒருவர் பெயரை சொல்லி அவருக்கு வாக்குகள் கேட்டோம். அப்பொழுது திடீரென தேர்தல் நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் அவர் பெயரை சொல்லி வாக்கு அளிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்தோம். ஆனாலும் அவருக்கு வாக்களித்தனர். எனவே ஆர்.கே. நகரில் கிடைத்த வெற்றி அந்த கட்சிக்கோ அல்லது அந்த கட்சி தலைவருக்கோ கிடைத்த வெற்றி இல்லை. இன்று அந்த கட்சி, தலைவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் எந்த கொம்பனாலும் இந்தி மொழியை திணிக்க முடியாது. தமிழ் மொழி தாய் மொழியாக இருக்கும் வரை யார் நினைத்தாலும் இந்தி திணிப்பை ஏற்கவே மாட்டோம். தமிழகத்தில் ஒருபோதும் இந்தி திணிப்பிற்கு சாத்தியம் இல்லை. இவ்வாறு பேசினார்.

Tags : speech ,Tamil Nadu , Minister OS Maniyan Action speech,no horn can impose Hindi
× RELATED கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது....