×

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது பள்ளிகளுக்கு போக்குவரத்து போலீஸ் திடீர் கட்டுப்பாடு

சென்னை: பள்ளிகளால் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படக்கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்து போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். சென்னையில் பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 30 பள்ளிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் ேநற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. போக்குவரத்து இணை கமிஷனர் எழிலரசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 30 பள்ளிகளை சேர்ந்த 60 பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது  எடுக்கப்பட்ட முடிவுகளின் விபரம் வருமாறு:

* பள்ளி வாகனங்கள் சீராக சென்று வர தேவையான தடுப்புகளை பயன்படுத்த வேண்டும்.
* பள்ளி அருகே ‘பள்ளி பகுதி’, ‘நோ பார்க்கிங்’ பலகைகளை நிறுவ வேண்டும்.
* பள்ளி மார்ஷல்களை கொண்டு ஒலிபெருக்கி மூலம் பள்ளி வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
* பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி வரும் வாகனங்கள் தங்கள் பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே ஏற்றி, இறக்க வேண்டும்.
* பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போக்குவரத்து விதிகளை பள்ளி மாணவர்களுக்கு கற்பிப்பதோடு தாங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.


Tags : schools ,public ,Traffic police emergency control schools , Traffic police emergency control ,schools ,not disturb the public
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...