×

வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதியம் 12,500 ஆக உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வன வளங்களை பாதுகாக்க தமிழ்நாடு வனத் துறையில் 1,119 வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வனப்பகுதிக்குள் வாழ்வதால், பெரும்பாலும் மலைவாழ் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதோடு மட்டுமின்றி, அடந்த வனப்பகுதியை நன்கு அறிந்துள்ளதன் காரணத்தால், வனப்பகுதிகளில் வன மரங்கள் திருட்டு, வேட்டையாடுதல், நக்சல்பாரிகள் ஊடுருவதைத் தடுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றனர். வன வளத்தையும், வன  உயிரினங்களையும் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். இப்பணியாளர்கள்  வனத்திற்குள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் வனவளங்களை காக்கும் பாதுகாப்பு  நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு வழங்கப்படும்  மாதாந்திர தொகுப்பூதியம் 10,000லிருந்து 12,500 ஆக உயர்த்தி  வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூலை 5ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். இதைத் தொடர்ந்து வேட்டை தடுப்பு காவலர்களுக்கான தொகுப்பூதியத்தை 10,000லிருந்து 12,500 ஆக உயர்த்தி தமிழக அரசின் வனத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட தொகை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட தொகுப்பூதியத்தால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 3.357 கோடி(3 கோடியே 35 லட்சத்து 70 ஆயிரம்) செலவாகும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : pay hike ,hunting detention officers ,government ,Tamil Nadu , 12,500 pay hike , hunting detention officers,Tamil Nadu government announces
× RELATED கொரோனா எதிரொலி: மத்திய அரசு...