திமுக நிர்வாகிகள் 2 பேர் நியமனம் : தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை: திமுக வர்த்தகர் அணித் துணைத்தலைவர், விவசாய அணித்துணைத்தலைவரை நியமித்து திமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: திமுக சட்டதிட்ட விதி31, பிரிவு 16ன் படி, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம், தலைவன்கோட்டையைச் சேர்ந்த எஸ். அய்யாதுரை பாண்டியன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தே.மதியழகன், விவசாய அணித் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,executives , DMK , appoint two executives
× RELATED என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் அடுத்தமாதம் வெளியீடு