×

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டத்தின்படி மாநிலத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்துக்கு தலைவர் நியமனம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள்  www.tn.gov.in/department/30 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான கொடுத்துள்ள படிவத்தில் புகைப்படத்துடன் 18.10.2019 அன்று மாலை 5.30 மணிக்குள், “செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், நெ.183/1,  ஈ.வெ.ரா. பெரியார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -10” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Tags : Child Rights Protection Commission , Apply for the post , Chairman ,Child Rights Protection Commission
× RELATED விழுப்புரத்தில் சிறுமி எரித்துக்...