×

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் 3கிலோ தங்கம், ரூ.87 லட்சம் ரொக்கம் காணிக்கை

மண்ணச்சநல்லூர்: திருச்சியில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதம் இருமுறை எண்ணப்படுகிறது. நேற்று கோயிலில் மொத்தம் 34 உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் எண்ணப்பட்டன. திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள், அயல்நாட்டு கரன்சிகளை எண்ணினர். இதில் உண்டியலில் ரொக்கமாக 87 லட்சத்து 732 ரூபாய், 3 கிலோ 180 கிராம் தங்க நகைகள், 11 கிலோ 310 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் 126 இருந்தன. இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன.

Tags : Samayapuram Mariamman Temple Undiyal , Samayapuram Mariamman Temple, Undial, offering
× RELATED தங்கம் சவரனுக்கு 472 சரிந்தது