கர்நாடகத்தில் மனித தன்மையற்ற நிகழ்வு அரங்கேற்றம் : ஊருக்குள் நுழைய பட்டியல் இன எம்.பி.க்கு தடை

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஊருக்குள் நுழையவிடாமல் மற்ற சமூகத்தினர் விரட்டி அடித்துள்ளனர். ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டவர் கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மக்களவை தொகுதி பாஜக உறுப்பினர் நாராயணசாமி ஆவார். இவர் தனது தொகுதிக்குட்பட்ட தும்கூர் மாவட்டம் கொல்லரஹட்டி கிராமத்திற்கு சென்று இருந்தார். குடிநீர், சாலை மற்றும் வளர்ச்சி பணிகளை பார்வையிட அவர் முயன்றார். ஆனால் அவரை ஊர் பொது மக்கள் தடுத்து நிறுத்திவிட்டனர்.

21ம் நூற்றாண்டிலும் இது போன்ற மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள் என்று பிற தலைவர்கள் வேதனை தெரிவித்தனர். தங்கள் ஊருக்குள் கோவில் உள்ளதால் பட்டியல் இனத்தவர் நுழையும் போது கோவிலின் புனிதம் கெட்டு விடும் என்று கூறி கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தானொரு தொகுதியின் எம்.பி. என்று நாராயணசாமி கூறியும் அதனை ஏற்க அந்த மக்கள் தயாராக இல்லை. இதனால் அவர் அங்கிருந்து திரும்பி சென்றுவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தொகுதிக்குட்பட்ட கிராமத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது கடும் கண்டன குரல்களை எழுப்பியுள்ளது. 


Tags : Inauguration ,Event ,BJP , Listeder, Chitradurga, Lok Sabha, Vol, BJP, Narayanasamy
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணி துவக்கம்