×

உறுப்பினர் மட்டுமே கட்சி சின்னத்தில் போட்டியிட அனுமதி... ஒரு கட்சி வேட்பாளர் வேறு கட்சி சின்னத்தில் நிற்க முடியாது : தேர்தல் ஆணையம்

சென்னை : ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வேற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு கட்சியின் உறுப்பினராக உள்ள ஒருவர் அந்த கட்சியில் இருந்து விலகாமல் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு போட்டியிட்டவர்களின் வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், ஒரு கட்சியைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என்ற விதி இருப்பதை ஏற்றுக் கொள்வதாக கூறினார். ஆனால் தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டுவிட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று அவர் வாதிட்டார். இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக அக்கட்சி சின்னங்களின் போட்டியிட்டு வெற்றிபெற்ற கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.


Tags : candidate ,EC ,No one , Election Commission, High Court, Judges, DMK, AIADMK
× RELATED சசி தரூருக்கு தேர்தல் ஆணையம்...