×

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு 3 ஆண்டு காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: நாடு முழுவதும் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பெரியாரின் பிறந்தநாளையொட்டி ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து 3 ஆண்டு  காலம் விதி விலக்கு கோரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மாணவா்களின் திறன் மேம்பாடுகளை மேம்படுத்தியதற்கு பிறகு அது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறினார். அதேபோல காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி பள்ளிகளில் விழாக்கள் நடைபெறும் என்றும் கூறினார். காலாண்டு விடுமுறை தொடர்பாக வதந்திகள் புறப்படுகிறது என்றும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார். பள்ளிகளில் ஒரு நாட்கள் கூட விடுமுறைக்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறிய அவர், கால அட்டவணை தற்போது மாற்றியமைக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார். இதுதவிர, 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மொழி படங்களுக்கான இரு தாள் தேர்வு தற்போது ஒரு தாள் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர வேறு எந்த அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக்கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அமைச்சரவையிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Tags : Senkottaiyan ,Tamil Nadu ,Elections ,Minister Senkotayan ,Nadu , 5,8, General Election, Tamil Nadu, Exclusion, Minister Senkottaiyan
× RELATED மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் உள்ள...