×

அரசு பள்ளியில் அடர் குறுவனத்திற்கு நடவு

தேவதானப்பட்டி: சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாவட்டத்தில் மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இந்த பள்ளி வாளாகத்தில் அடர் குறுவனம் அமைக்க திட்டமிட்டனர். அதன்படி மரக்கன்று நடும் இடத்தில் பள்ளந்தோண்டி அதில் தொழுஉரம், மரக்கழிவுகள், பலவகை மண், உள்ளிட்டவற்றை அந்த பள்ளத்தில் போட்டனர். பின்பு அந்த இடத்தை சரி செய்து அந்த இடத்தில் ஒரு மரக்கன்றுக்கு மரக்கன்று நெருக்கமாக நடவு செய்தனர். இதனால் மரம் வளர்ந்தவுடன் குறுவனமாக மாறிவிடும்.

இந்த மரம் நடும் விழாவில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் நடவு செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அடர் குறுவனத்தில் 750 மரக்கன்றுகள் நடப்பட்டது. தேசிய பசுமை படை ஆசிரியர் கலைச்செல்வி, மற்றும் ஆசிரியர்கள், அலுவலர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Government School , Government School
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...