×

பென்னாத்தூர் அருகே கோயில் திருவிழா... அந்தரத்தில் பறந்தபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அணைக்கட்டு: பென்னாத்தூர் அடுத்த கேசவபுரம் கிராமம் பச்சையம்மன் கோயில் 15ம் ஆண்டு திருவிழா கும்பாபிஷேகத்துடன் கடந்த 13ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கபட்ட தேரில் மேளதாளம், வாணவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை கோயிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோயில் முன் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக விரதம் இருந்த பக்தர்கள் தங்களது உடலில் எலுமிச்சை பழங்களை குத்திக்கொண்டும், கொக்கலிக் கட்டை கட்டிக் கொண்டும், அம்மன், காளி உள்ளிட்ட வேடங்களில் ஊர்வலமாக  வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இறுதியாக மாலை லாரியில் கம்புகள் கட்டி பக்தர்கள் முதுகு மற்றும் வாயில் அலகு குத்தி அந்தரத்தில் பறந்தபடி ஊர்வலமாக வந்து கோயில் முன் அலங்கரிக்கப்பட்டிருந்த பச்சையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் பென்னாத்தூர், சேகசவபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Temple Festival ,Bennathoor ,Festival ,Pennathur ,Temple , Dam, Pennathur, Temple, Festival
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்