கர்நாடகத்தில் ஆளில்லா உளவு விமானம் விவசாய நிலத்தில் விழுந்து விபத்து

பெங்களூர்: கர்நாடகத்தில் ஆளில்லா உளவு விமானம் விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது. கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஜோடி சிக்கனஹள்ளி என்ற கிராமத்தில் ஆளில்லா உளவு விமானம் விழுந்து நொறுங்கியது. இந்திய ராணுவத்துக்காக டி.ஆர்.டி.ஓ. நிறுவனம் ரஸ்டோம்-2 என்ற ஆளில்லா உளவு விமானத்தை உருவாக்கி சோதித்து வந்தது. ஆளில்லா உளவு விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்துக்கு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.


Tags : spy plane crashes ,farmland ,Karnataka , Karnataka, unmanned reconnaissance plane, accident
× RELATED விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியை...